30 பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற விஷ பாம்புடன் போராடி உயிர்நீத்த தெரு நாய்

பள்​ளிக் குழந்​தைகளை காப்​பாற்ற விஷ பாம்​புடன் போராடி உயிர்​நீத்த தெரு நாய்க்கு கிராம மக்​கள் அஞ்​சலி செலுத்தி அடக்​கம் செய்​தனர்.

தெரு நாய்​கள் தொல்லை அதி​கரித்து வரு​வ​தாக ஊடகங்​களில் அடிக்​கடி செய்தி வரு​கின்​றன. தெரு நாய்​களை கட்​டுப்​படுத்த அரசு நடவடிக்கை மேற்​கொண்​டால், விலங்கு நல ஆர்​வலர்​கள் எதிர்ப்பு தெரிவிக்​கின்​றனர். இப்​பிரச்​சினை நாடு முழு​வதும் உள்​ளது.

இந்​நிலை​யில் தெரு​நாய் ஒன்று விஷ பாம்​புடன் போராடி பள்​ளிக் குழந்​தைகளை காப்​பாற்​றிய சம்​பவம் இந்தியா ஒடி​சா​வில் நடை​பெற்​றுள்​ளது.

அங்​குள்ள மயூர்​பன்ச் மாவட்​டத்​தில், திராகுலா என்ற கிராமம் உள்​ளது. இங்​குள்ள நர்​சரி பள்​ளி​யில் 30 குழந்​தைகள் படிக்​கின்​றனர். இந்​நிலை​யில் பள்ளி வளாகம் அருகே விஷ பாம்பு ஒன்று வந்​தது.

இதை பார்த்​ததும் அந்த தெரு​வில் உள்ள காளி என்ற நாய் குரைத்து அதனுடன் சண்​டை​யிட்​டது. இதனால் அந்த பாம்பு சீற்​றத்​துடன் நாயை பலமுறை கொத்​தி​யது. முகத்​தி​லும், வாயிலும் பாம்பு கொத்​தி​யதை​யும் பொருட்​படுத்​தாமல் காளி முழு மூச்​சூடன் சண்​டை​யிட்டு பாம்பை கடித்து கொன்​றது.

ஆனால் பாம்​பின் விஷம் உடலில் ஏறிய​தால், சிறிது நேரத்​தில் காளி மயங்கி விழுந்து இறந்​தது. இச்​சம்​பவம் திராகுலா கிராம மக்​களை சோகத்​தில் ஆழ்த்​தி​யது. வீரத்​துடன் போராடி தங்​களின் குழந்​தைகளை காப்​பாற்​றிய காளிக்கு கிராம மக்​கள் வெள்​ளைத் துணி போர்த்​தி, மலர் மாலைகளால் அலங்​கரித்து அஞ்​சலி செலுத்​தினர்.

நன்றி – இந்து

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles