மலையக கட்சிகளின் பிரதான மே தினக் கூட்டங்கள் ரத்து! தோட்டவாரியாக சிறு நிகழ்வுகள் நடத்த ஏற்பாடு!

பெருந்தோட்டத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள் இந்த ஆண்டு மே தினப் பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்துவதில்லை என முடிவு செய்துள்ளன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் , தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன தங்கள் பிரதிநிதிகள் இந்த ஆண்டு மே தினப் பேரணிகளையோ கூட்டங்களையோ நடத்துவதில்லை என தெரிவித்துள்ளன.

அதற்குப் பதிலாக, தோட்டத் பகுதிகளிலுள்ள கோயில்களில் சமய வழிபாடுகளை நடத்தவும், தத்தமது தொழிற்சங்கங்களின் கொடிகளை ஏற்றவும் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியினர் கொழும்பில் நடாத்தும் மே தினப் பேரணியில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

தலவாக்கலை பி.கேதீஸ்

Related Articles

Latest Articles