’22’ ஜனநாயகத்துக்கு மரண அடி: எதிரணி போர்க்கொடி!

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் (திருத்த) சட்டமூலம் ஆகியவை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிரணிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர்.

முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலங்கள் “ஜனநாயகத்தின் மரணத்தைப்” பிரதிபலிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினர்.

இச்சட்டமூலங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியதுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல ஒழுங்குப் பிரச்சினைகளையும் (Points of order) எழுப்பினர்.

Related Articles

Latest Articles