ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இது பற்றி நேற்றிரவு ஒளிபரப்பாகிய அரசியல் விவாத நிகழ்ச்சியின்போது ஹர்ஷ டி சில்வாவிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு ,
“சமூகவலைத்தளங்களில் சிலர் வெளியிடும் பதிவுகள் தொடர்பில் பதிலளிக்க விடை இல்லை என்றே கூறவேண்டும்.
நான் எனது பயணத்தை மெதுவாகவே மேற்கொள்கின்றேன். நாம் ஒன்றிணைந்து குழுவொன்றை அமைத்து, அணியாக பயணித்து நாட்டை மீட்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.” என்றார்.
அதேவேளை, அரசாங்கத்துடன் இணையவுள்ளீர்களா என்ற கேள்விக்கு, இல்லை என ஹர்ஷ டி சில்வா உறுதியாக பதிலளித்தார்.
நாட்டை மீட்டெடுக்கவே நான் அரசியலுக்குள் வந்தேன். அந்தப் பணியை செய்ய முடியும் என நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
