உலகக்கிண்ண கால்பந்து திருவிழா இன்று ஆரம்பம்!

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகின்றது.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன.

உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக இம்முறை 48 அணிகள் களமிறங்குகின்றன.

மெக்சிக்கோவில் நடைபெறும் முதல் போட்டியில் மெக்சிக்கோ மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.

இலங்கை நேரப்படி இப்போட்டி 11 ஆம் திகதி அதிகாலை 12.30 மணிக்கு ஆரம்பமாகும்.

போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் துவக்க விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

உலக புகழ்பெற்ற பாடகி ஷகிராவின், உலககிண்ண தொடருக்கான இசை விருந்தும் இடம்பெறவுள்ளது. ஆரம்ப விழாவுக்கு 17 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles