ஆட்டோமீது மரம் முறிந்து விழுந்து மாணவர் உட்பட மூவர் பலி: நாவலப்பிட்டியவில் சோகம்!

ஆட்டோமீது மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.

நாவலப்பிட்டி, மாபகந்த பகுதியில் இன்று காலை 6.45 மணியளவில் அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் ஆட்டோவில் பயணித்த மற்றுமொரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநர் உயிர் தப்பியுள்ளார்.

மாபகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோமீதே மரம் முறிந்து விழுந்துள்ளது.

மீட்கப்பட்ட மூவரின் சடலங்களும் தற்போது நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு; கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles