கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெட்டிய, மில்லகாமுல பிரதேசத்தில் காதல் தோல்வி காரணமாக இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
காதலி எனக் கூறப்படும் யுவதியின் வீட்டிற்குச் சுமார் 50 மீட்டருக்கு அப்பால் உள்ள தேயிலை மலைப் பகுதியில், 30 வயதுடைய இந்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இப் பெண்ணின் வீட்டில் இவர்களின் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்காத காரணத்தினாலேயே, குறித்த இளைஞன் இந்தத் தவறான முடிவை எடுத்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கம்பளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
(க.யோகா)
(எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது)
மன அழுத்தம், தனிமை அல்லது மனரீதியான போராட்டங்களை எதிர்கொண்டால், உடனடி உதவிக்கும் தொழில்முறை வழிகாட்டலுக்கும் பின்வரும் எண்களைத் தொடர்புகொள்ளவும்:
1926 (தேசிய மனநல் உதவிச் சேவை – Sri Lanka)
வாழ்க்கை மிகவும் மதிப்பானது; பேசுவோம், தீர்வை காண்போம்!
