ஈரானின் அச்சுறுத்தலால் விமான பயணத்தை மாற்றிய ட்ரம்ப்

துருக்கியிலிருந்து திரும்பும் வழியில் தான் திடீரென விமானத்தை மாற்றியதற்கான காரணத்தைப் பற்றிப் பேசுகையில், தனக்கு படுகொலை அச்சுறுத்தல் இருப்பதை டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

அங்காராவில் (Ankara) நடைபெற்ற நேட்டோ மாநாட்டை முடித்துக்கொண்டு டிரம்ப் Air Force One விமானத்தில் புறப்பட்டார் . ஆனால், கத்தார் நாடு பரிசாக வழங்கிய ஆடம்பரமான புதிய விமானத்தில் அவர் பயணிக்கவில்லை.

அதற்குப் பதிலாக, அமெரிக்க விமானப்படையின் பழைய விமானம் ஒன்றில் அவர் பயணித்தார்.

இது குறித்து தனது ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகப் பக்கத்தில் விளக்கமளித்த அவர், “பழைய நினைவுகளுக்காக” (for old time’s sake) இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், இரண்டு விமானங்களுமே இங்கிலாந்தில் உள்ள ‘ஆர்ஏஎஃப் மில்டன்ஹால்’ (RAF Mildenhall) விமான தளத்திற்கு பறந்தன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் புதிய விமானத்தைப் பார்வையிடுவதற்காக, அந்த புதிய அதிநவீன விமானமும் அதே தளத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த திடீர் விமான மாற்றத்தின் பின்னணியில் படுகொலை அச்சுறுத்தல் ஏதேனும் இருந்ததா என்று நிருபர் ஒருவர் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த டிரம்ப், “ஈரானின் கொலைப் பட்டியலில் நான் தான் முதல் இடத்தில் இருக்கிறேன்” என்று கூறினார்.

அவர் கத்தார் பரிசளித்த விமானத்தில் அமெரிக்கா திரும்புவதாகவே முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles