ஈரானுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு கவசங்களை சீனா தொடர்ந்து வழங்கி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டிருந்தன.
உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டியே மேற்படி தகவலை வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கமைய அடுத்த சில வாரங்களில் ஈரானுக்கு கூடுதலாக ஆயுதங்களை அனுப்ப சீனா திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வாஷிங்டனில் நேற்று கருத்து வெளியிடுகையில்,
“ஈரானுக்கு சீனா ஆயுதங்களை வழங்குவது உறுதி செய்யப்பட்டால் அந்த நாடு மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்கும்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சீன வெளியுறவுத் துறைசெய்தித் தொடர்பாளர் கூறும்போது, “அமெரிக்க தரப்பு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடாது. அமெரிக்கா, ஈரான் போர் மிகவும் தீவிரமான பிரச்சினை ஆகும்.
இதில் பதற்றத்தை தணிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் கருத்து வெளியிடக்கூடாது’’ என்றார்.
