ஈரான் அச்சுறுத்தல் காரணமாக உணவு லாரியில் ட்ரம்ப் ரகசிய பயணம்

நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டுத் திரும்புவதற்காக துருக்கியில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தமக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக ரகசிய விமான பயணம் மேற்கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

” புலனாய்வுப் பிரிவு மற்றும் இராணுவத்தின் அறிவுறுத்தலின்படியே நான் செயற்படுகிறேன். அவர்கள் என்னை வேறு ஒரு விமானத்தில் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அவர்கள் சொல்வதை மட்டுமே நான் செய்ய வேண்டும்” என்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 8 ஆம் திகதி, ட்ரம்ப் தொலைக்காட்சி கேமராக்களின் முன்னிலையில் ‘நம்பர் ஒன்’ (Air Force One) அரச விமானத்தில் ஏறுவது போன்ற காட்சிகள் பதிவுசெய்யப்பட்டன.

ஆனால், அதன் பின்னர் உணவளிக்கும் ட்ரக் (catering truck) ஒன்றின் உதவியுடன் அவர் இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையிலேயே ட்ரம்ப் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக அன் காரா நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் போது, தான் ஈரானின் முக்கிய இலக்காக இருந்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

கடைசி நிமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த விமான மாற்றமானது, ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட (decoy) விமானத்தில் பயணம் செய்தவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

இருப்பினும், தான் ஏறிய இராணுவ ஜெட் விமானமே “அதிக ஆபத்தில்” இருந்ததாக ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை வாதிட்டார்.

அமெரிக்க அதிபரின் விமானத்தை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்த ஈரானிடமிருந்து நம்பகமான அச்சுறுத்தல் இருந்ததை அமெரிக்கா கண்டறிந்ததாக அதிகாரிகள் CBS செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளனர்.

சாத்தியமான ஈரான் அச்சுறுத்தலுக்குப் பதிலாக மேற்கொள்ளப்பட்ட இந்த நுட்பமான திட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபர் ரகசியமாக வெளியேற்றப்பட்டது அந்த விமானத்தில் இருந்த செய்தியாளர்களுக்கோ அல்லது சில வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கோ தெரிந்திருக்கவில்லை.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles