ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ரத்து

பாகிஸ்தானில் செப்டம்பரில் நடைபெற இருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் (ரி-20) போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பெற்றிருந்தாலும் அந்த உரிமையை இலங்கை கிரிக்கெட் சபைக்கு விட்டுக்கொடுப்பதாகவும், அதற்கு பதிலாக அடுத்த ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் சபை தலைவர் சவுரவ் கங்குலி இன்ஸ்டாகிராம் நேரலையில் நேற்று பேசுகையில், செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.

கொரோனா பரவலால் ஆசிய கோப்பை போட்டியை ரத்துசெய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இசான் மணியும் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles