அசைக்க முடியாத இரு தரப்பு உறவு!

 

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புதின் ஆகிய இருவருக்கும் இடையே பீஜிங்கில் நடைபெற்ற கலந்துரையாடல் ராஜதந்திர மட்டத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவாகவும் அசைக்க முடியாததாகவும் இருப்பதாக இரு தலைவர்களும் இந்த சந்திப்பில் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்க்கால சூழல் குறித்து கவலை தெரிவித்த ஜி ஜின்பிங், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை சீராக பராமரிக்க உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் ஆதிக்கப் போக்குகளை மறைமுகமாகச் சாடிய சீன ஜனாதிபதி, அமைதிப் பேச்சுவார்த்தைகளின் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஈரான் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், ரஷ்யா தொடர்ந்து சீனாவிற்கு நம்பகமான எரிசக்தி ஆதாரமாக விளங்கும் என்று புதின் உறுதியளித்தார்.

Related Articles

Latest Articles