இலங்கை கரப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மலையக மண்ணின் மைந்தன், ஊவா பரணகம, கம்பஹா தோட்டத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் சிவகாந்தனுக்கு பல தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர்.
இலங்கை விமானப்படையின் கரப்பந்தாட்ட அணியில் இவர் ஏற்கனவே இடம்பிடித்துள்ளார்.
பல சதாப்தங்களுக்கு பிறகே மலையக மண்ணில் இருந்து, மலையக தமிழர் ஒருவர், இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை மகிழச்சியளிக்கின்றது.
சந்திரபோஸ் சிவகாந்தனுக்கு சொந்த ஊரிலும், அவர் கற்ற கம்பஹா தமிழ் வித்தியாலயத்திலும் வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
