இன்று இலங்கை வருகிறார் வியட்நாம் ஜனாதிபதி: நாளை நாடாளுமன்றில் உரை!

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம்  இன்று 07 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்த அழைப்பின் பிரகாரமே இரு நாள் பயணமாக அவர் கொழும்பு வருகின்றார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை அவர் சந்தித்து பேச்சு நடத்துவார்.

8 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுவார் என தெரியவருகின்றது.

அதேவேளை, இலங்கை மற்றும் வியட்நாமுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

Related Articles

Latest Articles