இன்று முதல்வராகிறார் விஜய்! அமைச்சரவையும் பதவியேற்பு!!

தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கவுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்;றியது. எனினும், விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு வழங்கின.

அந்தவகையில் தவெக ஆட்சிக்கு 120 சட்;டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிட்டியுள்ளது.

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164-ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் நேற்று வழங்கினார். ஆட்சி அமைக்கவும் விஜய்க்கு அழைப்பு விடுத்தார்.

அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

தமிழகத்தின் 18-வது முதல்வராக விஜய் பதவியேற்கிறார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.

தவெக தரப்பில் செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர்.நிர்மல்குமார், அருண்ராஜ், வெங்கடரமணன், காங்கிரஸ் தரப்பில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை 11 ஆம் திகதி பதவியேற்கின்றனர். தற்காலிக சபாநாயகர் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

13 ஆம் திகதிக்குள் சட்டப் பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என விஜய்க்கு ஆளுநர் கெடு விதித்துள்ளார்.

விஜய் பதவியேற்கவுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles