தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளிக்கும் என தெரியவருகின்றது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சி தலைவர் திருமாவளவன இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தவெகவுக்கு தமது ஆதரவை நேற்று வழங்கின. காங்கிரஸ் கட்சியும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
அந்தவகையில் தவெக வசம் தற்போது 116 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆட்சியமைப்பதற்குரிய உரிமையை கோருவதற்குரிய 118 என்ற பெரும்பான்மைக்கு இன்னும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக வசம் இரு தொகுதிகள் உள்ளன. எனவே, விசிக ஆதரவளித்தால் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பது உறுதியாகும்.










