லிந்துலை, லெந்தோமஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண் தொழிலாளர் குழுவினர் இன்று காலை கொழுந்து கொய்துகொண்டிருந்தவேளையிலேயே குளவிகள் கலைந்துவந்து கொட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் லிந்துலை லெந்தோமஸ் பகுதியைச் சேர்ந்த அப்பாவு சுப்பிரமணியம் (வயது 71) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குளவிக் கொட்டுக்கு இலக்கான மேலும் 4 தொழிலாளர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.










