மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹதோவ தோட்டத்தின் கீழ் பிரிவில் தேயிலை மலைகளில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது குளவிக்கூடு கலைந்து தாக்குதல் நடத்தியதில், 6 பேர் பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
35 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
சம்பவத்தையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டுப் பசறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அவர்களில் ஒருவரின் நிலைமை மேலதிக சிகிச்ச தேவைப்படும் வகையில் இருந்ததால், அவர் பதுளை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
(செய்தி: த.டிமேஷன்)










