அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிரட்டல்களுக்கு ஒருபோதும் அடிபணியோம் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து இவ்வாறு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட ஈரான் ராணுவ செய்தி தொடர்பாளர் Abolfazl Shekarchi , அமெரிக்காவின் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வலிமை தங்களுக்கு இருப்பதாக சூளுரைத்தார்.
ஈரானின் இறையாண்மைக்கு எதிராக விடுக்கப்படும் சவால்களைத் தங்களால் முறியடிக்க முடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் நாடு பின்வாங்கப்போவதில்லை என்பதை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
