மக்கள் ஆணையைமீற செயற்படமாட்டோம்: நீதி அமைச்சர் உறுதி

”நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாம் ஒருபோதும் மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படமாட்டோம்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து, கொழும்பு மறைமாவட்டப் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு (06) தெளிவுபடுத்தப்பட்டது.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் பேராயரைச் சந்தித்து, இந்த உத்தேச சட்டமூலம் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் தெரிவித்ததாவது:

“நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்குதல் உள்ளிட்ட பல மறுசீரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாகவே அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், இது குறித்துச் சமூகத்தில் தவறான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையிலேயே இந்தச் சட்டமூலத்தின் உண்மையான நோக்கம் குறித்துப் பேராயருக்குத் தெளிவுபடுத்தினோம்.

நாடு, நாட்டு மக்கள் மற்றும் நீதித்துறைக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களை மாத்திரம் முன்னெடுக்குமாறு பேராயர் எமக்கு ஆலோசனை வழங்கினார்.

இதேவேளை, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு நேரம் கோரியுள்ளனர். இது குறித்து நான் ஜனாதிபதியின் கவனத்திற்குக்கொண்டு சென்றுள்ளேன்; விரைவில் அச்சந்திப்பு நடைபெறும் என நம்புகிறேன்” என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles