டி- 20 உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகுமா பங்களாதேஷ் ?

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாட்டோம் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தரப்பில் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடருக்காக பங்களாதேஷ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் நீடிக்கும் சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக பங்களாதேஷ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக நேற்றுக்குள் முடிவு தெரிவிக்க வேண்டும் என ஐசிசி, கால அவகாசம் வழங்கியிருந்தது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட மாட்டோம் எனவும், தங்களுக்கான போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தரப்பில் கேட்ட நிலையில், அந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்ட நிலையில், உலகக் கோப்பைத் தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கோரிக்கையை ஐசிசி ஏற்கனவே நிராகரித்துவிட்ட நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி மாற்று அணியாக சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.

 

Related Articles

Latest Articles