“ அனைத்து எதிரணிகளும் ஓரணியில் திரளும்பட்சத்தில் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தயார்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு, வடமேல் மாகாணசபைக்கான முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் உள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“மாகாணசபை ஊடாக கிராமிய மக்களுக்கு சேவை செய்வதற்குரிய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, முதல்வராக அப்பணியை முன்னெடுப்பதற்கு வாய்ப்பு இருந்தால் அது நல்லது.
நான் முதல்வராக பதவி வகித்துள்ளேன். தற்போது தேசிய அரசியலில் உள்ளேன். எனவே, உரிய வகையில் ஆராய்ந்தே முடிவுகளை எடுக்க வேண்டும்.
அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தால், பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் போட்டியிடலாம்.” – என்றார் தயாசிறி ஜயசேகர.
