ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 21 லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன.
ஹதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
ஐதராபாத் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது.
அடுத்த ஆட்டத்தில் 65 ஓட்டங்கள் வித்தியா சத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. அதன் பிறகு 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவிடமும், 6 விக்கெட் வித்தியா பஞ்சாப்பிடமும் தோல்வி அடைந்தது.
ராஜஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது.
அடுத்த போட்டியில் 6ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத்தையும் 3ஆவது போட்டியில் மும்பையையும் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் ஐதராபாத் 12 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 9 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
