ராஜஸ்தானின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஆர்.சி.பி.?

ஐபிஎல் தொடரில் 16 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் , ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றன.

இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் இப்போட்டி ஆரம்பமாகும்.

ஆர்சிபி அணி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவை 43 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது.

இந்த இரு ஆட்டங்களையும் ஆர்சிபி அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடி இருந்தது. தற்போது நடப்பு சீசனில் முதன்முறையாக வெளியே சென்று விளையாட உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

Related Articles

Latest Articles