இன்று களமிறங்குவாரா ‘தல’ தோனி?

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
4 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை 1 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

அதேபோல 4 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா 3 தோல்வி , 1 ஆட்டம் மழையால் ரத்தால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

எனவே, இன்றைய போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் பலப்பரீட்சையில் ஈடுபடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.

இன்றைய போட்டியில் சென்னை அணிக்காக தோனி களமிறங்குவதற்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகின்றது.

 

Related Articles

Latest Articles