நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ‘பொடி மெனிகே’ ரயிலின் மிதிப்பலகையில் நின்றவாறு ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முயன்ற துருக்கி நாட்டு யுவதியொருவர், ரயிலில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (19) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த யுவதி உட்பட மேலும் மூவர் சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் ரயிலில் எல்ல பகுதியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
ரயில் மிதிப்பலகையில் இருந்து வழுக்கி விழுந்த குறித்த யுவதி, உடனடியாக மீட்கப்பட்டு அதே ரயிலில் அம்பேவல ரயில் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து அவசர ஆம்புலன்ஸ் வண்டி மூலம் அவர் நுவரெலியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
