சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை, குறித்த கட்டுத் துப்பாக்கியுடன் கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய லுணுகலை, பல்லேகிருவ பகுதியைச் சேர்ந்த ஒருவராவார்.
லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள் பல்லேகிருவ பகுதியில் அமைந்துள்ள சந்தேகநபரின் வீட்டிற்குச் சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, வீட்டின் வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபர் உடனடியாக கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லுணுகலை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்
த.டிமேஷன்










