‘அச்சுறுத்தல்’ – முல்லைதீவு நீதிபதி பதவி துறப்பு! நாட்டை விட்டும் வெளியேற்றம்?

முல்லைத்தீவு, குருந்தூர்மலை விவகாரம் உட்பட முக்கிய வழக்குகளை விசாரணை செய்த நீதிபதி ரீ.சரவணராஜா , பதவி துறந்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி இது தொடர்பான கடிதத்தை அவர் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே பதவி துறப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர், தன்னுடைய பதவி விலகலை அறிவித்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நீதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகள் போராட்டமும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles