அடுத்த வருடம் க.பொ.த. சாதாரணதரப்பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்தும் வகையில் பாடசாலைக் கல்வி படிப்படியாக வழமைக்கு கொண்டுவரப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அதன் மூலம் பரீட்சை அட்டவணையை புதுப்பித்துக்கொள்ள நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 7,800 ஆசிரியர்களுக்கு ஜூன் 15ஆம் திகதி புதிய நியமனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.










