அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதல் – 9 சிறார்கள் உட்பட 10 பேர் பலி

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி கொண்டதில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கிளாடிட் புயல் பாதிப்பினால் தென்கிழக்கு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், கைவிடப்பட்ட அல்லது துன்புறுத்தலுக்கு ஆளான பள்ளி மாணவர்கள் உள்பட பலருக்கு அடைக்கலம் அளிக்கும் காப்பக நபர்களை சுமந்து கொண்டு பேருந்து ஒன்று சென்றுள்ளது.

அந்த பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்திற்குள்ளானது. இதில் 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியுள்ளன. இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த 8 குழந்தைகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் 4 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இதேபோன்று மற்றொரு வாகனத்தில் இருந்த 29 வயது நபர் மற்றும் அவரது 9 மாத கைக்குழந்தை ஆகியோரும் உயிரிழந்து உள்ளனர். இதனால் விபத்தில் மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர்.

இதனை தொடர்ந்து அலபாமாவின் கிழக்கு மத்திய பகுதியில் நோடாசுல்கா என்ற இடத்தில் உள்ள உயர்நிலை பள்ளியில் பொதுமக்கள் திரளாக கூடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக ஆறுதல் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles