அடுத்து என்ன? ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட கூட்டம்!

ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறுகின்ற முதலாவது ஆளும் கட்சி கூட்டம் இதுவாகும்.

நாளை பிற்பகல் நடைபெறவுள்ள இந்த விசேட கூட்டத்தில் அவசர கால சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றுவது மற்றும் சர்வ கட்சி அரசுஒன்றை உருவாக்குவது ஆகியவை தொடர்பில் இந்த விசேட பேச்சு வார்த்தையின் போது முக்கிய கவனம் செலுத்தப்படலாம் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles