அடுத்து என்ன? மந்திராலோசனை நடத்துகிறார் கோட்டா!

மக்கள் புரட்சியால் ஜனாதிபதி பதவியை துறந்த கோட்டாபய ராஜபக்ச, தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக தற்போது தீவிரமாக ஆராய்ந்துவருகின்றாராம்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்காக அமெரிக்கா குடியுரிமையை துறந்ததால், தற்போது அங்கு செல்வதிலும் அவருக்கு ஆயிரம் தடைகளாம். அவ்வாறு சென்றால்கூட ‘போர்க்குற்றங்கள்’ அவருக்கு பொறியாக மாறிவிடும் என்ற அச்சமும் சூழ்ந்துள்ளது.

இதனால் ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி பதவியை பெற்று செல்லுமாறும், அப்பதவி பாதுகாப்பு கவசமாகவும், அமெரிக்கா செல்வதற்கான தடைகளை நீக்கும் ஆயுதமாகவும் இருக்குமென சிலர் கோட்டாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளாராம்.

இதற்கிடையில் கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்குவதற்கு மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலர் முயற்சித்துவருகின்றனரென அரசியல் களத்தில் அரசல் புரசலாக கதைஅடிபடுகின்றது.

இதற்காக கோட்டா நாடாளுமன்றம் வருவதற்கு மொட்டு கட்சியின் தேசிய பட்டியல் எம்.பியொருவர் பதவியை தியாகம் செய்ய தயாராக இருப்பதாகவும் தகவல். ஆனால் மொட்டு கட்சியில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியில் நீடிப்பதை விரும்புவதால், ஏனைய மாற்று ஏற்பாடுகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டிய நிலை கோட்டாவுக்கு ஏற்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles