அடைமழையால் வெள்ளக்காடானது வடக்கு

வடக்கு மாகாணத்தில் பொழியும் அடைமழை காரணமாக 28 ஆயிரத்து 143   குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட செயலாளர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 460 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 816 பேர் பாதிப்படைந்துள்ளனர். 29 இடைத்தங்கல் முகாம்களில் 571 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 954 பேர்  தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 272 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 287 பேர் பாதிப்படைந்துள்ளனர். 61 பாடசாலைகளில் 377 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 266 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 104 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 374 பேர் பாதிப்படைந்துள்ளனர். 4 இடைத்தங்கல் முகாம்களில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 520 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 15  ஆயிரத்து 205  குடும்பங்களைச் சேர்ந்த 52 ஆயிரத்து 487 பேர் பாதிப்படைந்துள்ளனர். 43 இடைத்தங்கல் முகாம்களில் ஆயிரத்து 240 குடும்பங்களைச் சேர்ந்த 4  ஆயிரத்து 128 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா  மாவட்டத்தில் 457 குடும்பங்களைச் சேர்ந்த 867 பேர் பாதிப்படைந்துள்ளனர். 3 இடைத்தங்கல் முகாம்களில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய வடக்கில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 143 குடும்பங்களைச் சேர்ந்த ௯௦ ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 290 இடைத்தங்கல் முகாம்களில் 2 ஆயிரத்து 384 குடும்பங்களைச் சேரந்த 8 ஆயிரத்து 70 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் மாவட்ட செயலாளர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles