அண்ணனை கொலை செய்த 14 வயது சிறுவன்

வீட்டில் நித்திரை செய்துகொண்டிருந்த சகோதரனை கொலைசெய்த சம்பவத்தின் பேரில் 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேக்கவத்தை – பலாதொட்ட பிரதேசத்தில் நேற்று பிற்பகல் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சிறுவனின் காதல் விவகாரம் தொடர்பில் இவர்களுக்கிடையில் வாக்குவாதமொன்று இடம்பெற்றுள்ளதுடன், காதல் தொடர்பை துண்டிக்குமாறு மூத்த சகோதரன், சந்தேகநபரான இளைய சகோதரனை வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது வாக்குவாதம் முற்றியதையடுத்து 26 வயதான சகோதரன், பாடசாலை மாணவனான தமது சகோதரனை தாக்கிவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.

அதன்போது, சந்தேகநபரான சிறுவன், உறக்கத்தில் இருந்த தமது மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தினால் கழுத்து பகுதியில் வெட்டிக் கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டதன் பின்னர் நேற்று சட்ட வைத்திய பரிசோதனைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிறுவனை இன்று (08) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles