அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கின்றது சதொச

லங்கா சதொச நிறுவனம் 04 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நாளை (24) முதல் குறைக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவால் குறைக்கப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் புதிய விலை 229 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 14 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 265 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் பூண்டு 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 495 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 43 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் புதிய விலை 255 ரூபாவாகும்

Related Articles

Latest Articles