அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் சாத்தியம்?

இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு குறைப்பு எதிர்பார்க்கப் படுவதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதை ஆரம்பிக்க முடியும் என அதன் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

டொலர் மதிப்பு உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles