அனுமதி பத்திரமின்றி ஆடுகளை ஏற்றிச்சென்ற லொறி மஸ்கெலியா பொலிஸாரால் மடக்கிபிடிப்பு!

மஸ்கெலியாவில் இருந்து கரவனெல்ல பகுதிக்கு உரிய அனுமதி பத்திரம் எதுவுமின்றி 10 ஆடுகளை ஏற்றிச்சென்ற லொறியை நேற்று மடக்கி பிடித்த மஸ்கெலியா பொலிஸார், லொறியில் இருந்தவர்களை கைது செய்துள்ளனர்.

லொறியில் இருந்தவர்களிடம் அனுமதி பத்திரம், மிருவ வைத்திய அதிகாரியின் பத்திரம் என்பன இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். லொறியும், ஆடுகளும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

Related Articles

Latest Articles