பசறை நகரில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக லொறியொன்றில் மாடு ஏற்றிச்சென்ற இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
38 மற்றும் 26 வயதுகளுடைய யூரி தோட்டம் அகரதென்ன மற்றும் பசறை பிபிலை வீதி 13 கட்டை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
லுனுகல ஹொப்டன் பகுதியில் இருந்து சிறிய லொறி ஒன்றில் மாடு ஒன்று சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்படுவதாக பசறை பொலிஸ் போக்குவரத்து பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பசறை பொலிஸ் நிலைய பிரதான பொறுப்பதிகாரி ஈ எம் பியரத்ன ஏக்கநாயக்க ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய பிரசன்ன (7713) மற்றும் கொடிதுவாக்கு (26602) ஆகிய உத்தியோகத்தர்களினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.