அன்று கூறிய பொய்களே அரசுக்கு இன்று ஆபத்தாக மாறியுள்ளது

“ஆயிரக்கணக்கான பொய்களை அள்ளிவீசியே தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியது. அன்று அக்கட்சியினர் கூறிய பொய்களே அவர்களுக்கு இன்று ஆபத்தாக மாறியுள்ளது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ செய்ய முடியாத அதேபோல நடைமுறைக்கு சாத்தியமற்ற ஆயிரக்கணக்கான பொய்களைக்கூறியே தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியது. எம்மால் செய்யக்கூடிய விடயங்களை மாத்திரமே நாம் தேர்தல் காலங்களில் உறுதிமொழிகளாக வழங்கினோம்.

தாம் கூறிய பொய்களே அரசாங்கத்துக்கு இன்று ஆபத்தாக மாறியுள்ளது. எனவே, தற்போதாவது உண்மை நிலைமையை நாட்டு மக்களுக்கு கூறவேண்டும். குறைந்தபட்சம் நாட்டு மக்களுக்கு மூவேளை உண்ணக்கூடிய வகையிலான சூழ்நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

ஆட்சிக்கு வந்த பிறகு மின்கட்டம் குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது. அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மக்களிடம் கருத்துகோருகின்றோம் எனக் கூறி தற்போது காலம் கடத்தப்படுகின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles