ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
அடுத்தவாரம் இச்சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இதன்படி மே 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இச்சந்திப்பு இடம்பெறலாம் என தெரியவருகின்றது.
வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக கலந்துரையாடவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சந்திப்புக்கு கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டையும் அவர் அறிவித்துள்ளார்.