அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத பரஸ்பர தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக நேற்று அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெள்ளை மாளிகையால் அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துவிதமான பொருட்களுக்கும் 30 வீத தீர்வை வரி அறிவிடப்படவுள்ளது.
இந்நிலையிலேயே மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.