மஹிந்த ராஜபக்ச தாம் வகிக்கும் பிரதமர் பதவியை இன்றுமாலை ராஜினாமாச் செய்வார் என்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது. இன்று மாலை அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் அவர் தனது ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிப் பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் படி அமைச்சரவை ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை கூடும். அதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிப்பார்.
அத்தோடு இந்த அமைச்சரவை செயலிழக்கும். ஏற்கனவே தயாரிக்கப்பட்டு நிலுவையில் இருக்கும் அமைச்சரவைப் பத்திரங்களை உரியமுறையில் கையாள்வதற்காக இன்று மாலை வரை தமதுராஜினாமாவைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தள்ளி வைத்திருக்கின்றார் என்றுகூறப்பட்டது.
இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் தான் பிரதமர் என்ற முறையில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்ளும் கடைசி கூட்டமாக இருக்கும்.
அடுத்த 17ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் போது தமது மொட்டுக் கட்சியை சேர்ந்த குறைந்தது எண்பது எம்.பிகளுடன் எதிர்க்கட்சிப் பக்கம் போய் அமர்வதற்கு மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுஇருக்கிறார்.
அதேசமயம் அரசிலிருந்து மொட்டுக்கட்சி மஹிந்த ராஜபக்r தலைமையில்வெளியேறி, எதிர்க்கட்சி தரப்புக்கு வந்துவிட்டதாலும், ஐக்கிய மக்கள் சக்தியை விடஅதிக உறுப்பினர்களுடன் எதிரணியில் தங்கள் கட்சி இருப்பதாலும் எதிர்க்கட்சித்தலைவர் பதவி அக்கட்சியின் நாடாளு மன்ற குழுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரும் கடிதம் ஒன்றை மஹிந்த ராஜபக்ச சார்பில் அவரது பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம்சபாநாயகருக்கு அனுப்பி வைப்பார்
என்றும் தெரிகின்றது.