” சட்டமா அதிபருக்கு நாம் எந்தவொரு விதத்திலும் அழுத்தம் கொடுப்பதில்லை. அவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நிரூபித்தால் பதவியை துறந்து வீட்டுக்கு செல்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.”
இவ்வாறு நீதி அமைச்சர் அலி சப்ரி, எதிரணி உறுப்பினர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.
சட்டா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகைகள் தற்போது மீளப்பெறப்படுகின்றன. இதனால் அத்திணைக்களம்மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுவருகின்றது. அரசியல் தலையீடுகளும் உள்ளன என எதிரண எம்.பிக்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், நல்லாட்சியின்போது போலியான முறையில் வழக்குகள் தொடுக்கப்பட்டதாலேயே அவற்றை மீளப்பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.










