அயரி தமிழ் மகா வித்தியாலத்தில் 503 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட அயரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ராமசீலன் தலைமையில் இன்று நடைபெற்றது.

” Wisdom For Asiya ” நிறுவனத்தின் அனுசரணையில் சுமார் 65 லட்சம் ரூபா செலவில் 503 மாணவர்களுக்கு இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதொகாவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

சிறப்பு விருந்தினராக ” Wisdom For Asiya ” நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆப்ரகாம் தோமஸ், SMC CHRIST CALVARY CHURCH ( புசல்லாவை ) பங்குதந்தை P.S.K. கிரிஸ்டோபர் , கசூன் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

கொத்மலை பிரதேச செயலாளர் லக்மால், கொத்மலை வலய கல்பி பணிப்பாளர், இதொகாவின் பிரதி செயலாளர் எஸ். செல்லமுத்து, இ.தொ.கா வின் கொத்மலை வட்டார அமைப்பாளர் புண்ணிய மூர்த்தி, பிரதி பொது செயலாளர் பழனி சசிக்குமார், முன்னாள் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்களான ரஜீவ் காந்தி, இளங்கோவன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

Latest Articles