அரசின் விதிமுறையைமீறி ஹட்டனில் ஆராதனைக் கூட்டம்! 145 பேருக்கு எச்சரிக்கை!!

ஹட்டன் பகுதியில் உள்ள கத்தோலிக்க மதஸ்தானமொன்றில் 50 இற்கும் மேற்பட்டவர்களுடன் ஆராதனை நடத்திய ஸ்தானத்தின் பொறுப்பாளருக்கு, ஹட்டன் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
 
குறித்த தேவ ஆராதனையில் 50 இற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமையவே குறித்த நிலையம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
 
அதன் போது 145 பேர் இந்த ஆராதனையில் கலந்து கொண்டிருந்தனர். குறித்த நபர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியிருந்த போதிலும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட 50 பேரை விட அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்ததனால் இவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
 
இனிவரும் காலங்களில் குறித்த நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் பொது சுகாதா பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
 
க.கிசாந்தன்

Related Articles

Latest Articles