அரசிலிருந்து வெளியேறுவாரா மைத்திரி?

” அரசுக்குள் ஒழுக்கமாக இருக்கமுடியாவிட்டால், வெளியேறுவதே நல்லது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் பதிலடி கொடுத்துள்ளார்.

மாத்தளையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சி கூட்டமொன்றில் உரையாற்றிய சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளதையும் கண்டித்தார்.

நேற்று அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் அரசுமீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மொட்டு கட்சி உறுப்பினர்கள் மைத்திரிக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அவரை அரசில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்திவருகின்றனர்.

Related Articles

Latest Articles