ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் புதன்கிழமை (28) அமைச்சரவை கூடவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்துக்கு இதன்போது அனுமதி பெறப்படவுள்ளது.
இது தொடர்பான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்றமும் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் கூடவுள்ளது.
