ஆசிரியருக்கு கொரோனா – கற்பித்தல் நடவடிக்கை இடைநிறுத்தம்

நாவலப்பிட்டிய வெஸ்ட்ஹேல் தேசிய பாடசாலையின் மத்திய நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த கற்பித்தல் நடவடிக்கை இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

‘ஒன்லைன்’ ஊடாக கற்றல் வாய்ப்புகளை இழந்த மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் மேற்படி பாடசாலையின் மத்திய நிலையத்தில்  5, 11 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் இடம்பெற்றுவந்தன.

இதில் தரம் 11 இல் கற்பித்தலை மேற்கொண்ட ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இன்று முதல் கற்பித்தல் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles