ஆப்கானிஸ்தானில் இணைய சேவைக்கு தடை!

ஆப்​கானிஸ்​தானில் மேலும் 5 மாகாணங்​களில் பைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

வடக்கு ஆப்​கானிஸ்​தான் பால்க் மாகாணத்​தில் கடந்த செவ்​வாய்க்​கிழமை பைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டது. ஒழுக்கக்கேட்டை தடுக்​கும் நடவடிக்​கை​யாக இத்​தடை விதிக்​கப்​பட்​டுள்​ள​தாக மாகாண அரசு தெரி​வித்​தது.

இந்​நிலை​யில் தலி​பான் தலை​வரின் உத்​தர​வின் பேரில் பாக்​லான், பதக் ஷான், குண்​டுஸ், நங்​கர்​ஹர் மற்றும் தகார் ஆகிய மாகாணங்​களி​லும் பைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு நேற்று முன்​தினம் தடை விதிக்​கப்​பட்​டது.

ஆப்​கானிஸ்​தானில் ஆட்சி அதி​காரத்தை தலி​பான்​கள் கடந்த 2021 ஆகஸ்டில் கைப்​பற்​றிய பிறகு இது​போன்ற தடை விதிக்​கப்​படு​வது இதுவே முதல் முறை.

இதனால் அரசு அலு​வல​கங்​கள், தனி​யார் துறை, பொதுத் துறை நிறு​வனங்​கள் மற்​றும் வீடு​களில் வைபை இணைய இணைப்பு துண்​டிக்​கப்​பட்​டு உள்​ளது. எனினும் மொபைல் இணைய சேவை தொடர்ந்து இயங்கி வரு​கிறது.

இந்​நிலை​யில் ஒழுக்​கக்​கே​டான செயல்​களை தடுப்​ப​தற்​காக இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு மாற்று ஏற்​பாடு செய்​யப்​படும் என்​றும் மாகாண அரசுகள் கூறி​யுள்​ளன. இந்த தடையை ஆப்​கானிஸ்​தான் ஊடக ஆதரவு அமைப்பு கண்​டித்​துள்​ளது.

“தலி​பான் தலை​வரின் உத்​தர​வின் பேரில் மேற்​கொள்​ளப்​பட்ட இந்த நடவடிக்​கை, லட்​சக்​கணக்​கான மக்​களின் இலவச தகவல் மற்​றும் அத்​தி​யா வசிய சேவை​கள் பெறு​வதை தடுப்​பது மட்​டுமன்​றி, கருத்து சுதந்​திரம் மற்​றும் ஊடகப் பணிக்​கும் பெரும் அச்​சுறுத்​தலை ஏற்​படுத்​தி​யுள்​ளது” என்று அந்த அமைப்பு தெரி​வித்​துள்​ளது.

அதேவேளை, ஆஸ்திரேலியாவில் வாழும் ஆப்கானிஸ்தான் சமூகமும் இதனை வன்மையாகக் கண்டித்துள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles