ஆயிரம் ரூபா கிடைக்குமா? இன்று வெளியாகும் விசேட அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பான முக்கிய பேச்சு வார்த்தையொன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்தவித இறுதித் தீர்மானமும் இன்றி முடிவுற்றுள்ள நிலையில் இன்றைய பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் பெறுவதாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவின் தலைமையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியன கலந்துகொள்ளவுள்ளன.

அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா என தொழிற்சங்கங்களினால் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் முதலாளிமார் சம்மேளனம்  அதனை நிராகரித்து வருகின்றது.

அந்த நிலையில் சம்பள நிர்ணய சபையின் ஊடாக அதற்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் வகையில் தொழில் அமைச்சர் மற்றும் தொழில் ஆணையாளர் ஆகியோரின் தலையீட்டோடு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கிணங்க இன்றைய தினம் நடைபெறும் பேச்சுவார்த்தை மூலம் இறுதி தீர்வொன்றுக்கு வரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அது தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மற்றுமொரு தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவிக்கையில்;

கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாகவோ சம்பள நிர்ணய சபை ஊடாகவோ அல்லது அரசாங்கத்தின் நேரடி தலையீட்டுடனோ எந்த வழியானாலும் சரி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். வேறு ஏதாவது கொடுப்பனவுகள் அதனோடு இணைக்கப்பட்டு ஆயிரம் ரூபா வழங்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா என்பதே தோட்டத் தொழிலாளர்களதும் தொழிற்சங்கங்களினதும் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் பெரும் இழுபறி நிலையில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் இன்றைய பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

இன்றைய பேச்சு வார்த்தையில் சாதகமான தீர்வு எட்டப்படாவிட்டால் மலையகம் தழுவிய தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தொழிலாளர்கள் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles